[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்

normal-life-returns-almost-ninety-percentage-in-thoothukudi-collector-sandeep-nanduri

தூத்துக்குடியில் 90 சதவீதம் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் கூறியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஆணைப்படி ஆலைக்கான மின் இணைப்பு, குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளன. 

90 சதவீத மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பும்” என்று கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை மீனவர்கள், பாதிக்கப்பட்டோர் சந்தித்து,  ‘ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6பேரை பிரேதபரிசோதனை செய்ய சம்மதிப்போம்’ என்று கூறினர். அப்போது, மக்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட எஸ்.பி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 145 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இயல்பு நிலை திரும்பியது பணியில் உள்ள போலீசார் திரும்ப பெறுவார்கள் என்று அவர் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close