[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

வெயிலில் இருந்து கிடைக்குமா விடுதலை?: அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்

tn-weather-forcast-for-next-24-hours

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என சென்னை வானிலை‌ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனினும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ய்பு இருப்பதாகவும்,நாளை முதல் உள் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட‌ம் குழித்துறையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களைப் பொறுத்தவரை சேலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் நீடிக்கும்.சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி‌யும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக்கூடும்.

திருச்சி, மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும்.நெல்லையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 33 ‌டிகிரி செல்சியஸ் வெப்பம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவையில் 38 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close