[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தனியாருக்காக இவ்வளவு செய்யவேண்டுமா? - துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஆதங்கம்

people-who-affected-in-thoothukudi-gun-shoot-spoke-with-puthiya-thalaimurai

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத்தான் போராடினோம், அரசுக்கு எதிராக போராடவில்லை என காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் தங்களது வேதனையை புதிய தலைமுறை செய்தியாளரிடம் கூறியுள்ளனர். 

காயமடைந்தவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “போராட்டம் நடக்கும் போது ஓரமாக தான் நின்று கொண்டிருந்தோம். போலீஸ்காரர் இவனை மூட்டில் சுட்டுள்ளார்கள். பின்னர் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எங்களுக்கு ஒருமணி அளவில் போன் செய்து தகவலை தெரிவித்தார்கள். நாங்கள் திரேஸ்புரத்தில் இருக்கிறோம். அங்கு போலீசாரின் அராஜகம் தாங்க முடியவில்லை. லத்தியால் அடித்தார்கள். துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என பயமுறுத்தினார்கள். நாங்கள் வீட்டில் இருந்தோம். இவன் மூட்டில் அடிபட்டு இங்கு அனாதையாக கிடந்துள்ளான்” என்றார். 

             

காயமடைந்தவர் பேசுகையில், “எனக்கு மூட்டில் அடிபட்டு இருக்கு. ரொம்ப தூரத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள். எனக்கு அருகில் இருந்த பெண்ணுக்கு தலையில் குண்டடிபட்டது. அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கிட்டதட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே 4 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரு தனியாருக்காக இவ்வளவு பண்ணனுமா? நாங்க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துல” என்று உருக்கமாக கூறினார். 

            

இதனிடையே, காவல்துறையினர் தங்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக தடியடியில் காயம்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட காவல்துறையினர் அனுமதி மறுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் காயமடைந்தவரின் உறவினர் ஒருவர் பேசுகையில், “போலீஸ்காரர்கள் தாறுமாறாக தடியடி நடத்தினார்கள். அடிக்காதீர்கள்..அடிக்காதீர்கள் எனக் கதறி அழுதும் அடிப்பதை நிறுத்தவில்லை. மாற்றி, மாற்றி அடித்தார்கள். அடிக்க பயன்படுத்தியது லத்தி இல்லை, கட்ட கம்பு. உருட்டு கட்டை போல் கையில் வைத்திருந்தார்கள்” என்றார்.

            

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் கூறுகையில், “என்னுடைய மனைவியை தூக்கச் சென்ற மண்டையை அடித்து உடைத்துவிட்டார்கள். மேலிருந்து கால் வரை அடி. ரத்தம் வழியும் போதும் அடித்தார்கள். அறவழியில் போராடக்கூட விடவில்லை” என்றார்.

                             

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து‌ தமிழக அரசு விளக்கமளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் விளக்கமளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close