[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

தமிழகத்தில் தீர்க்கப்படவேண்டிய முக்கிய பிரச்னை எது?: வாக்காளர்கள் கருத்து

voters-priorities-in-tamil-nadu

தமி‌ழகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகளாக மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் போக்குவரத்து நெரிசல் முதலிடம் பிடித்திருப்பதாக தனியார் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசியல் சாராத அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், தமிழகத்தில் தீர்வு காணப்படப்பட வேண்டிய பிரச்னைகளில் முதன்மையானது போக்குவரத்து நெரிசல் என்று 48 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறை மற்றும் காற்றில் மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று 35 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். வாகன மாசு அதிகம் என 34 சதவிகிதம் பேரும், வேலைவாய்ப்பு பெருக வேண்டுமென 22 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என 21 சதவிகிதத்தினரும், சாலைகளில் மிதிவண்டி ஓட்டுவதற்கு தனிப்பாதை வேண்டுமென 18 சதவிகிதத்தினரும் ஆய்வில் கூறியுள்ளனர். வேலைத் திறன் பயிற்சி அவசியமென 13 சதவிகிதத்தினரும், பெண்களுக்கு அதிகாரமும், பாதுகாப்பும் மேம்பட வேண்டுமென 11 சதவிகிதத்தினரும் கருத்து தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close