[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா

எந்நாளும் அன்னையரை போற்றிடுவோம்: ஸ்டாலின்

dmk-working-president-mkstalin-mothers-day-wishes

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

உலகம் முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்திற்குச் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,  “அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்!” என தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து திமுக மகளிர் அணி மற்றும் சிறுபான்மை அணியினர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணா அறிவாலயம் புறப்பட்டுச் சென்றார். மாநில நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு நடத்துகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close