[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

bomb-threat-to-us-consulate-in-chennai

சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு மதுபோதையில் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சில மணி நேரத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா(30). பாட்சா தனது கைப்பேசியில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழன் இரவு 9.53 மணிக்கு தொடர்பு கொண்டு அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெள்ளி அதிகாலை 3.16 மணிக்கு வெடிக்கும் எனவும் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை பெற்றவுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அமெரிக்க தூதரகம் விரைந்தனர். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வளாகத்தை தீவிர சோதனை செய்தும் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் அது ஒரு ஏமாற்று அழைப்பு என்பதை உறுதி செய்தனர். 

மேலும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் இருவர் அந்தக் கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்தனர். பின் பாட்சாவின் மனைவியே அவரை ராயப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தார். பொருட்கள் வாங்கிவர பாட்சா இரண்டு முறை மலேசியாவிற்கும், மூன்று முறை பாங்காக்கிற்கும் சென்று வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தூதரகத்தின் வெளியே விசா விண்ணப்பிக்க காத்திருப்போரை தூதரக அதிகாரிகள் குறைந்த மரியாதையுடன் நடத்துவதால்தான் மிரட்டல் அழைப்பு விடுக்க காரணம் அமைந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆகவேதான் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி கூறினார். இந்நிலையில் சாதிக் பாட்சா மீது ராயப்பேட்டை போலீஸ்
வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close