ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த ரஜினி ரசிகரின் கால்கள் துண்டானது.
மதுரை அடுத்து விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். நேற்று இவர் தன் நண்பர்களுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்பு இன்று அதிகாலை சென்னை எழும்பூரிலிருந்து, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு புறப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்போது ரயிலில், படிக்கட்டில் அமர்ந்திருந்த காசி விஸ்வநாதன் இரண்டு கால்களும் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கியது. இதில் அவரது இரண்டு கால்களும் துண்டானது உடனடியாக அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !