[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை

chennai-girl-recovered-in-trichy

சென்னையில் இருந்து 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை ஓட்டேரியை‌ச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள மூதாட்டி வீட்டில் பணியாற்றி வந்தார். உடல்நலம் குன்றிய மூதாட்டியை கவனித்துக் கொள்வது தான் சிறுமியின் வேலையாக இருந்துள்ளது. அப்போது மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி மீரான் (52) என்பவர் வந்து சென்றுள்ளார். இவர் 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவருக்கு பிள்ளைகளும் உள்ளனர். 52 வயதுடைய அவரை, அந்தச் சிறுமி, அப்பா என்றே அன்புடன் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஒருநாள் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற மீரான், உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருமாறும் சிறுமியை அழைத்துள்ளார். ஏற்கெனவே அறிமுகமான நபர் என்பதால், அவர் சொன்னதை நம்பிய சிறுமி, மிரானுடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சிறுமியை தாம்பரத்திற்கு அழைத்துச் சென்ற மீரான், அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அமர வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி, ‘அப்பா என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

அப்போது, சிறுமியை காதலிப்பதாகவும்,‌ திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் மீரான் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து கத்த முயற்சித்துள்ளார். ஆனால் பேருந்தில் கூச்சலிட்டால் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய மீரான், சிறுமியை திருச்சி மலைக்கோட்டைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வீடு ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் கொடுமைகள் செய்து வந்துள்ளார். மீரான் வெளியே சென்ற நேரத்தில் அங்கிருந்த செல்ஃபோன் மூலம் தான் கடத்திவரப்பட்டதை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளிக்க, சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தலைமைச் செயலக காலணி காவல் நிலைய‌த்தில் இருந்து திருச்சி மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் சிறுமி பேசிய செல்போன் நம்பரில் அவரை தொடர்பு கொண்ட திருச்சி காவல்துறையினர், சிறுமியிடம் ‘திருடன், திருடன்’ என கூச்சலிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோன்று சிறுமியும் கூச்சலிட அப்பகுதி மக்கள் திரண்டு, மீரானை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டு, மீரானை கைது செய்தனர். மேலும் மீரான் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close