[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

ஆற்றல்மிகு பேச்சாளர் அறிவொளி மறைவு

pattimandram-judge-arivoli-pass-away

தமிழகப் பட்டிமன்ற மேடைகளை தன் வசீகர பேச்சால் ஈர்த்து வந்த அறிவொளி நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 80.

பட்டிமன்றங்களில் நிலவிய தட்டையான பேச்சு வழக்கத்தை மாற்றி அறிவார்ந்த எல்லைக்கு அதனை அழைத்து சென்றவர் முனைவர் அ.அறிவொளி. தமிழறிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பல தளங்களில் தமிழ்ச்சேவை புரிந்து வந்தவர். இவர் பங்கேற்கும் மேடையில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. தரமான பேச்சு, உயர்வான மொழிநடை என தன் இறுதி காலம் வரை செழுமையான தமிழ்ப்பணியாற்றி வந்தார் அறிவொளி. 
டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கொண்டு சேர்த்தவர். புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்தில் இருந்து தீர்வை முன் வைத்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருக்கோயில் வரிசைகள் எனும் தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள புகழ் வாய்ந்த கோயில்களுக்கு பயணித்து அதன் சிறப்புக்களையும் அதன் வரலாற்றையும் ஆராய்ந்து அளித்தார். இதுவரை 120க்கும் மேலான நூற்களை படைத்துள்ளார். இவருக்கு ஆய்வுரை திலகம் என்னும் பட்டத்தை அளித்து கெளரவித்தது திருச்சி கம்பன் கழகம். கபிலவாணர் விருதையும் பெற்றுள்ளார் இவர்.

தமிழக மேடை பேச்சுக்களில் வழக்காடு மன்றம் என்னும் வடிவத்தை 1986ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இவர் பிறந்தது நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள சிக்கல் என்னும் சிறு கிராமம். ஆனால் திருச்சியில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

அறிவொளியின் இறுதி சடங்குகள் திருச்சியிலுள்ள டிவிஎஸ் டோல்கேட் அருகே இருக்கும் ஹனிபா காலனியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் இவர் சார்ந்த தகவல்களுக்கு 0431-2315633 இலக்கத்தை தொடர்புக் கொள்ளலாம். 

தன் வாழ்நாள் முழுக்க வாசனை குறையாத பக்தி மணத்தால் மேடைகளை அழகு சேர்த்து வந்த இவரது இழப்பு நல்ல தமிழ் விரும்பிகளுக்கு பேரிழப்பாகும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close