மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாபு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேடியம்மாள் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம் பாபுவை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தது. அத்துடன் வேடியம்மாளின் ஆட்கொணர்வு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, 2010-2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் மணல் கடத்தலுக்கு துணை போன அரசு ஊழியர்கள் மீது 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அத்துடன், மணல் கடத்தல் வழக்கில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டனர்.
ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா!!
குல்பூஷண் வழக்கு: பாக்.கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம்
இம்ரான் கானின் புல்வாமா தாக்குதல் கருத்திற்கு இந்தியா பதிலடி
மேஜரின் இறுதி ஊர்வலத்தில் ‘ஐ லவ் யூ’ எனக் கதறி அழுத மனைவி
மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?