[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

காவிரியை திறக்காத கர்நாடகம்; மேட்டூரை நனைத்த கோடை மழை 

rain-fall-in-metur-at-salem

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்ததின் காரணமாக அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது.  இந்த நிலையில் தற்பொழுது தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக எல்லையான பில்லிகுண்டுலு பகுதியில் மழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அணைக்கான நீர்வரத்து நேற்று 521  கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் இன்று இரண்டு மடங்காக அதிகரித்து வினாடிக்கு 1,449 கன அடியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான நதிநீர் பங்கீட்டின் படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காத நிலையில் அவ்வப்போது மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதை வைத்து கோடை காலத்திற்கு பொதுமக்களுக்கு  தேவையான குடிநீரை தொடர்ந்து வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலை  நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 34.77 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 9.55 டிஎம்சியாகவும் இருந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close