[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

தேனியில் இருதரப்பினரிடையே மோதல்: தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரணை

confrontation-between-the-two-sides-in-theni

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிட ஆணையத் துணை தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த மாதம் 24ஆம் தேதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூதாட்டியின் உடலை மற்றொரு பிரிவினர் வசித்து வரும் தெரு வழியாக கொண்டு சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ளர் ஒரு வீட்டில் திருமணம் நடைப்பெற்றதால் உடலை வேறு வழியாக கொண்டு செல்ல வேண்டுமென கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருபிரிவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சில கடைகள் வீடுகள் சேதமாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினரின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த மோதலில் காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இன்று விசாரணை மேற்கொண்டார். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பலதேவ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close