[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

மணல் கொள்ளை: 5 அதிகாரிகளுடன் சென்ற போது ஜெகதீசன் மட்டும் கொலை!

nellai-police-jagadish-murder-by-sand-mafias-in-nellai

நெல்லையில் மணற்கொள்ளையர்களை பிடிக்கும் போது காவலர் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன். திருமணம் முடிந்த இவர், தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் மூலக்கரை அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தார். இவர் மணற்கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். மணற்கொள்ளை விவகாரத்திலும், மற்ற வழக்குகளில் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல் பணிபுரிந்து வந்ததாக சக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு 9.30 மணியளவில் ஜெகதீசன் வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது நம்பியாற்றில் சில மணல்கொள்ளையர்கள், மணலை அள்ளிச்செல்வதாக காவல்நிலையத்திலிருந்து தகவல் வந்துள்ளது. உடனே புறப்பட்டு பணிக்கு சென்ற ஜெகதீஷ், 5 பேர் கொண்ட குழுவுடன் தாமும் இணைந்து மணற்கொள்ளையர்களை பிடிக்கச்சென்றுள்ளார். நம்பியாற்றில் மணற்கொள்ளை நடக்கும் பகுதி அருகே சென்றதும், அனைவரும் தனித்தனியாக சென்று குற்றவாளிகளை தேடிப்பிடிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் தனித்தனியாக சென்று தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

அப்போது ஜெகதீசன் மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கியுள்ளார். குற்றவாளிகளை பிடித்து கைது செய்ய முயற்சித்துள்ளார். மணற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். தனி ஒரு காவலராக போராடிய ஜெகதீசனை, குற்றவாளிகள் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் தாங்கள் வைத்திருந்து ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தேடுதல் வேட்டை நடத்திய அனைவரும் காவலர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு திரும்ப, ஜெகதீசன் மட்டும் திரும்பவில்லை. அவர் எங்கே? என தேடிய சக காவலர்கள், அதிகாலையில் அவரது உடல் பரப்பாடி பகுதியில் கிடப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவரது உடலில் கம்பியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.

அப்போது ஜெகதீசன் மடக்கிய டிராக்டரும் பஞ்சராகி அங்கே நின்றுள்ளது. அதை கைப்பற்றிய காவல்துறையினர், அதன் உரிமையாளரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் தாமரைக்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் வாடகைக்கு எடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது. முருகன் இதற்கு முன்னரே பலமுறை மணற்கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்துள்ளது. எனவே அவர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை காவலர்கள் செய்து வருகின்றனர். ஆனால் முருகன் தலைமறைவாகிவிட்டதால், அவரது தந்தை உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உடற்கூறு ஆய்வு முடிந்து திருப்பி ஒப்படைக்கப்பட்ட உடலை வாங்க மறுத்து, ஜெகதீசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க வேண்டும், ஜெகதீசன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close