[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

நீட் அவசரம்: காலை உணவில்லாமல் தேர்வுக்கு சென்ற மாணவர்கள்

neet-ug-2018-childrens-are-suffered

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தமிழகம், கேரளா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வுக்கான விண்ணப்பம் செய்திருந்தனர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். 24,720 மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுகின்றனர். சுமார் 5 ஆயிரம் தமிழக மாணவ, மாணவிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். கடும் சோதனைக்கு பிறகு காலை 7.30 மணி முதல் 9.30‌ மணி வரை மாணவ, மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2 கட்டங்களாக மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்ற பலர், தங்களால் காலை உணவை உட்கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர். மாணவர்களுடன் வந்த பெற்றோர் தாங்கள் காத்திருப்பதற்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கலாம் என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close