[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நீட் தேர்வு எழுத மாணவிக்கு மறுப்பு:  ஹால் டிக்கெட்டால் குழப்பம்

deny-the-student-to-write-the-neet-exam

சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இவர்களுக்காக‌ 2 ஆயிரத்து ‌‌25‌5 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சேலத்தில் நீட் தேர்வு எழுத 26 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில், சேலம் கொண்டலாம் பட்டி சவுடேஸ்வரி கல்லூயில் தேர்வு எழுத ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த அலுவலர்கள், தேர்வு மையம் மாறி வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதன்காரணமாக மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்த பெற்றோர்கள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.இந்த குழப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிந்து அந்த மாணவி உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என அங்குள்ள கூடியுள்ள பெற்றோர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.தேர்வு அலுவலர்கள் மாணவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement:
Related Tags : TamilNaduNeet ExamSalem
Advertisement:
Advertisement:
[X] Close