[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

வெளிநாட்டில் வேலை: சினிமா பாணியில் பண மோசடி

avadi-cheating-agent-arrested

திரைப்படப் பாணியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரு‌வதாக கூறி பண மோசடி செய்து தலைமறைவாகி இருந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் இம்ரான் ஷா. இவர், இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனத்தை வளசரவாக்கத்தில் நடத்தி வந்தார். கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, நபர் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் என்று 15 க்கும் மேற்பட்டவர்களிடம் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரையும் இதுவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. வெளிநாடு செல்வது குறித்து பணம் கட்டியவர்கள் கேட்டபோது விரைவில் அனுப்பி வைத்து விடுவதாக இம்ரான் ஷா கூறியுள்ளார். இந்நிலையில் இம்ரான் ஷா சில நாட்களில் தலைமறைவானார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இம்ரான் ஷாவை மதுரையில் கைது செய்தனர்.‌ அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோல் அலுவலகம் நடத்தி கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் ஷாவை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close