[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

bomb-threat-for-chief-minister-palanisamy-s-house-and-threatened-person-was-arrested

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் வீட்டில் உள்ள காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். அடுத்த 15வது நிமிடத்தில் கட்டுப்பாட்டறைக்கு மீண்டும் அழைத்த அதே நபர், நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ்தோட்ட இல்லத்திலும் வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்தார். 

தொலைபேசியில் அழைத்த நபரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே முதலமைச்சர் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தொலைபேசி எண்ணை கண்காணித்து வந்த காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் உடனே அங்கு விரைந்து அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் கடலூரைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்ததுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close