[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

சிறுமியின் 18 வார கரு கலைக்க நீதிமன்றம் அனுமதி

the-court-allowed-the-girl-s-18-week-embryo

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 18 வார கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித் துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கருவுற்ற சிறுமி, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த குழந்தைகள் நலக் குழு, அவரது18 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மகப்பேறியல் துறை தலைவர் கருத்தை அறிந்து தெரிவிக்க உத்தரவிட்டார். 

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகப்பேறியல் துறை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். சிறுமியின் கருவை விரைவில் கலைக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்க அனுமதியளித்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close