[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

நான் திருடன் இல்ல.. தன் வாயால் மாட்டிக்கொண்ட திருடன்

a-thief-caught-with-his-mouth

சென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியவரின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். 

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் பூ வியாபாரி மாரிமுத்து. கடந்த இரண்டாம் தேதி இரவு காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு தனது குடும்பத்துடன் உறங்கி கொண்டு இருந்தார். திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்த திருடர்களுக்கு, பீரோவிலேயே அதன் சாவியும் இருந்தது வசதியாகப்போனது. எந்த சிரமும் இல்லாமல், சத்தமும் இல்லாமல் பீரோவை திறந்த திருடர்கள் அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். காலையில் கண்விழித்த மாரிமுத்துவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எவ்வளவு எளிதாக திருடினார்களோ, அவ்வளவு எளிதாக காவல்துறை வசம் சிக்கிக் கொண்ட சுவாரஸ்யமும் இந்த வழக்கில் நடந்தேறியது. மண்ணடி பகுதியில் இரவில் சாலையில் நின்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் விசாரித்துள்ளனர். தானாக முன்வந்து, தான் திருடனில்லை எனக்கூறியதோடு, உடைகளை சோதித்துக்கொள்ளுங்கள் எனக்கூறி, உடைகளையும் கழற்றிக் காட்டியுள்ளார். இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. காவல் நிலையத்தில் தங்களது பாணியில் காவலர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இளைஞர் பவுல்ராஜ் என்பதும், பூ வியாபாரி மாரிமுத்து வீட்டில் நண்பருடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. நகை, பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

கோடை காலத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என்றும் சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close