[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS கர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்
  • BREAKING-NEWS சென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி
  • BREAKING-NEWS பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மணமகனின் தந்தை

child-marraige-stopped-in-sivagangai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ப்ளஸ் 2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் நவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மா‌ணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண் நான்கு மாதம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கலைசெல்வனின் தாயும், பெண்ணின் பெற்றோரும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக கலைச்செல்வனின் தந்தை மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் அளித்தார். மகளிர் காவல்துறையினர் விரைந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர். குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கலைசெல்வன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close