[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

தமிழகத்தின் 'நயாகரா' ஒகேனக்கல் ! சுற்றலாம் மீனை சுவைக்கலாம் ! 

hogenakkal-is-a-waterfall-in-south-india-on-the-kaveri-river-in-the-dharmapuri-district-of-the-indian-state-of-tamil-nadu

தமிழகத்தின் நயாகரா என்று வர்ணிக்கப்படுவது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு த்ரில் பயணம். 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைச்சாலையில் பயணித்தால் கோடை வெளியில் உணவைத்தேடி சாலையில் அங்கும் இங்கும் நடைபோடும் விலங்குகளுக்கு பஞ்சம் இருக்காது. அவ்வப்போது யானைக்  கூட்டம் கூட சாலையை மறிப்பதுண்டு. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தை தாண்டி கர்நாடக, ஆந்திரம்,  கேரள மாநிலங்களில் இருந்தும் படையெடுக்கின்றனர். வெளிநாட்டினரும் வந்துச் செல்லும் ஒகேனக்கல் அப்படி என்னதான் ஸ்பெஷல் என்று கேப்பவர்களுக்கு அங்கு சென்றால் அருவியில் இருந்து வந்து விழும் சாரல் பதில் சொல்லும். 

                      

அகன்று பரந்து விரிந்து வரும் காவேரி ஆறு ஒகேனக்கல்லில் வந்துதான் பிரிந்து அருவிகளாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி என விழுந்து எழுகிறது காவிரி. அருவிகளின் அழகை கண்டு ரசிக்க காவிரி ஆற்றின் குறுக்கே தொங்குப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. அருவிகளில் பார்க்க மட்டும் இல்லை.. குளிக்கவும் அனுமதிக்கபடுவதுண்டு. 
ஆம் காலை 9 மணி முதல் மாலை 5 வரை அனுமதிக்கப்படுவதுடன், அருவியில் குளிக்க ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு அறை வசதிகள் உள்ளன.

 

சில்லிடும் பரிசல் பயணம் !

ஒகேனக்கல்லின் சிறப்பு அம்சமே பரிசல் பயணம் தான். ஒரு பரிசலில் 4 பயணிகள் செல்ல மட்டுமே என பாதுகாப்பாக அனுக்கபடுவதுடன், இதற்கு கட்டணம் 750 ரூபாய் என அரசே கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமின்றி அங்கேயே பிடித்த மீன்கள். நாம் என்ன வகை வேண்டும் என்று சொல்லிவிட்டால் தயார் செய்யும் வசதியும் உண்டு. ஒகேனக்கல்லின் சிறப்பில் முக்கியமானது ஆயுர்வேத மசாஜ். விடுமுறை நாட்களில்  ஆயுர்வேத மசாஜ்க்கு என தனி கூட்டம் அணி வகுத்து நிற்கும். குழந்தைகள் கண்டு ரசிக்க வனத்துறை சார்பில், முதலைகள் மறுவாழ்வு மையமும், வண்ண மீன் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. 

                                         

எப்படி செல்லாம் ஒகேனக்கலுக்கு ?

ஒகேனக்கலுக்கு தருமபுரியிலிருந்து பேருந்தில் சென்று வர ஒரு நபருக்கு 80 ரூபாய் மட்டுமே செலவு. மேலும் சென்னை, பெங்களூர், கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிருந்தும் தருமபுரி, மொரப்பூர் மார்க்கத்தில் ரயில் வசதியும் உள்ளது. சேலம் விமான நிலையத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் ஒகேனக்கல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடியவை சுற்றுலாத்தலங்கள் தான். அதன் அடிபடையில் கோடை விடுமுறை விடபட்டு இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணிவகுக்கின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close