[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

அரிய வகை மரங்களை வெட்டி கடத்தல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு 

cutting-of-rare-trees-and-smuggling-on-nilgiris

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர் கதையாகியுள்ளது எனவும் அரசு அதிகாரிகள் மரக் கொள்ளையர்களுக்கு துணை போவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல அரிய வகை மரங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே அந்த அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கூடலூர் அருகேயுள்ள வேடன்வயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அரிய வகை அயனி பலா மற்றும் பலா மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சி நடந்துள்ளது. மரங்கள் வெட்டி சாய்க்கப்படும் வரையில் வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தவில்லை. அப்பகுதி மக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்த பின்னரே வருவாய்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close