[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

மரங்களை வெட்டுவதா? கோவையில் பொதுமக்கள் எதிர்ப்பு

coimbatore-tree-issue-public-comments

கோவையில் சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளதற்கு மக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கோவையின் முக்கிய அடையாளமாக உள்ளது சிறுவாணி தண்ணீர். இந்த அணைப்பகுதிக்கு செல்லும் சாலை குளுமையான பாதை. இந்தச் சாலையில், வெள்ளியங்கிரி, ஈஷா யோகா மையம், சாடிவயல், கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. இதற்காக சாலையோரத்தில் உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்த்துறை முடிவெடுத்துள்ளது.

காளம்பாளையம் பகுதியில் இருந்து இருட்டுப் பள்ளம் பகுதி வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்த உள்ளனர். மரங்களை வெட்டுவதன் மூலமாக இங்குள்ள குளுமையான சூழல் பாதிக்கப்படும் என இப்பகுதி மக்களின் வருத்தம் தெரிவித்துள்ளனர். மொத்தம் 140 மரங்கள் வெட்டப்படுவதாக இருந்த நிலையில் தற்போது 83 மரங்களை வெட்ட உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மரங்களை வெட்டாமல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு இணையாக பல மரங்களை வைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணிகளை செய்ய வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close