[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி ஏதும் இல்லை: அப்போலோ உயர்நீதிமன்றத்தில் பதில்

jayalalithaa-blood-sample-not-available-apollo-in-madras-high-court

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி ஏதும் தங்களது மருத்துவமனையில் இல்லை என அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவின்  ரத்த மாதிரி இருக்கிறதா..? என்பதை தெரிவிக்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரியோ, திசு மாதிரியோ தங்களிடம் கிடையாது என அப்போலோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, முந்தைய விசாரணையின்போது ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அப்போலோ மருத்துவமனை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அப்போலோ கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே 4 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் மேலும் காலம் தாழ்த்த முடியாது என தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி ஏதும் தங்களிடம் இல்லை என அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close