[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்: பயணிகள் மகிழ்ச்சி

train-ticket-in-tamil-also-in-tamilnadu

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இன்று முதல் இடம்பெறுகிறது.

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் பயண விவரங்கள் இருக்கும். தமிழ் மொழியில் இருக்காது. எனவே தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களால் அதில் இருக்கும் விவரத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. கேட்டப்படி தான் டிக்கெட் கொடுத்துள்ளார்களா..? என்பதை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இன்று முதல் இடம்பெறுகிறது. தற்போது சோதனை முயற்சியாக ஒரு சில ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளில் மட்டுமே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெற்றதை கண்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கேரளாவிலும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளில் மலையாள மொழியுடன் கூடிய விவரங்களில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close