[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

காவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி

dmk-allies-to-stage-human-chain-agitation-today

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் ‌நடக்கும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. முழு அடைப்பு போராட்டம், அதைத் தொடர்ந்து காவிரி மீட்புப் பயணம் என திமுக செயல் தலைவர்‌ மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதம் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. 

மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் வரை இப்போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தஞ்சையில் வைகோவும் சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close