[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

ஏசி வெடித்து ஆசிரியை உயிரிழப்பு: இயற்கை விபத்தா..? சதியா..?

head-master-dead-in-krishnagiri

கிருஷ்ணகிரியை அடுத்த சாந்தி நகரில் குளிர்சாதனக்கருவி வெடித்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார். இதனையடுத்து இது இயற்கையான விபத்தா..? அல்லது திட்டமிடப்பட்ட கொலையா..? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆஞ்சலாமேரி. இவரது கணவர் ஆல்பர்ட். மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டில் ஏசி வசதி உள்ளது. நேற்றிரவும் ஏசி ஓடிக்கொண்டிருந்த நிலையில்தான் இருவரும் உறங்கியுள்ளனர். இதனிடையே அதிகாலையில் ஆல்பர்ட் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது வீடு முழுக்க புகை மூட்டம் காணப்பட்டிருக்கிறது. அவரது மனைவியும் ஆல்சலாமேரியும் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக ஏசி ஸ்டெப்லைசர் வெடித்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது.

இதனிடையே கணவர் நடைபயிற்சிக்காக வெளியே சென்ற நேரம் பார்த்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே  இதனை இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் எனக் கூறி ஐபிசி 174கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் ஆஞ்சலாமேரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலில் தீக்காயம் அதிகமாக இருந்ததால் பிரேத பரிதோசனை அறிக்கையிலும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாதிரிகள் சேகரிப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில்தான் இயற்கையான விபத்தா..? அல்லது திட்டமிடப்பட்ட கொலையா..? என்பது தெரியவரும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close