[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆளுநரை திரும்பப் பெறுக:  திமுகவினர் பேரணி

dmk-protest-against-governor

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப்பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து கிண்டி நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியை தடுத்து நிறுத்த காவல்துறை தடுப்புகள் அமைத்த நிலையில், அதனை தாண்டி சிலர் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாக புகார் கூறியுள்ள திமுகவினர், அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ‌மேலும் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை ஆளுநர் அமைத்த குழுவே விசாரிக்கும் எனக்கூறுவது சர்வாதிகார போக்கு எனவும் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close