[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்

வண்டலூர் போகனுமா ஆஃப்ல டிக்கெட்ட புக் பண்ணுங்க !

vandalur-park-introducing-new-app

வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் முன்பதிவு செய்யும் வசதியுடன் கூடிய ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2300 விலங்கினங்கள் இருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ‘வண்டலூர் பூங்கா’வில் ஆண்டு தோறும் இந்திய மற்றும் உலக அளவிலிருந்து சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து போகின்றனர். அதில் இப்போது பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா நிர்வாகம் கைபேசி செயலி “ vandalur zoo " என்ற பெயரில் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் உபயோகப்படுத்தும் வண்ணம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த ஆண்ட்ராய்டு மூலம் பூங்கா நுழைவுக்கான டிக்கெட்டை முன் பதிவு செய்யவும், பூங்காவில் சுலபமாக செல்ல பூங்கா வரைப்படத்துடன் விலங்கு இருப்பிடங்களின் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பூங்காவினுள் காணப்படும் பாலூட்டிகள் ஊர்வன மற்றும் பறவைகள் குறித்து தகவலமைப்புகள் வழங்கபடுவதுடன் அவைகளுக்கு ஒலி விளக்கவுரை வசதியும், பூங்கா நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு தொடர்பாக  செயலியில்  தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கைப்பேசி செயலியானது கலந்துரையாடக்கூடிய வகையிலும், பூங்கா நுழைந்த இடத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு விலங்கின இருப்பிடத்திற்கும் ஓய்வு அறை, உணவு விடுதி , கழிப்பறை போன்ற இடங்களுக்கு செல்ல என அனைத்து  விவரங்களையும் அச்செயலி வழங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close