[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

விவசாயம் செழிக்க ஒரு விஷேச திருவிழா: மதுரை கொண்டாட்டம்

festival-for-agriculture-in-madurai

மேலூர் அருகே தமிழ்ப் புத்தாண்டில் விவசாயம் செழிக்க வெற்றிலையை பிரித்து கொடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள வெள்ளலூரில் சித்திரை முதல் நாளான இன்று விவசாயம் செழிக்க வெற்றிலை பிரித்து கொடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். 5 மாகாணங்கள் 58 கிராமங்களைக் கொண்ட பகுதிகளை ‘வெள்ளலூர் நாடு’ என அழைப்பர். சித்திரை முதல் நாளான இன்று 11 அம்பலகாரர்கள், இளங்கட்சிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் வெள்ளலூர் மந்தை முன்புள்ள மந்தை கருப்பணசாமி முன்பு வழிபட்டு ஒன்று கூடினர்.

பின்பு மொத்தமாகக் கொண்டு வரப்பட்ட வெற்றிலைகளை அவரவர் கரை என்று சொல்லக்கூடிய பிரிவினர்களுக்கு ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொடுத்தனர். அவற்றை பெற்றுகொண்ட கிராமத்தினர் தங்களது வீடுகளில் வைத்து வணங்கிட்டு பின்னர் சாணம் மற்றும் குப்பைகளை வயல்வெளியில் இட்டு வழிபடுவர். இவ்வாறு செய்வதால் விவசாயம் செழிக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு மேலாக வெற்றிலை பிரி திருவிழாவை இவர்கள் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close