நடிகர் அரவிந்த்சாமிக்கு எதிராக வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியாக 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை நடிகர் அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்ய அண்ணா சாலையில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளைக்கு வருமான வரித் துறை உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ஏற்கெனவே தோராய வருமான வரியாக ரூபாய் 30 லட்சத்தை முன் கூட்டியே செலுத்தியுள்ளேன். எனது தோராய வருமான வரியை அதிகாரிகள் பரிசீலிக்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தோராய வருமானவரி செலுத்திய விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் வரை மேற்கொண்டு அரவிந்த்சாமி வங்கிக் கணக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !