[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மெரினாவில் பலத்த பாதுகாப்பு: சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி

people-restricted-in-marina-full-police-protection

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று சிலர் போராட்டம் நடத்தியதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் பலத்த சோதனைக்கு பிறகே மக்களை போலீசார் அனுமதிக்கின்றனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினாவில் மக்கள் கூட்டம் அலைமோதும். மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் இன்னும் அதிக இருக்கும். ஆனால் இன்று போலீசாரின் கெடுபிடியால் மக்கள் கூட்டம் இல்லாமல் மெரினா வெறிச்சோடி காணப்படுகிறது. குடும்பங்களுடன் வருபவர்கள் மட்டும் மெரினாவில் அங்கொருவரும் இங்கொருவருமாக இருக்கிறார்கள்.

‘மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை, மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என நாங்கள் தடை விதிக்கவில்லை; விதித்தது உயர்நீதிமன்றம் தான்’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இச்சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்குநிலை குறித்தும் அசம்பாவிதங்களை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்ததாக தெரிகிறது. காவிரி வாரியம் அமைக்கப்படாததால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close