காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்.3ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள், வணிகர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது; எந்த தனிப்பட்ட லாபநோக்கத்திற்காகவும் கடையடைப்பு போராட்டம் இல்லை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பில் சென்னை ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.
அதேபோல், ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேட்டிலும் கடையடைப்பு நடைபெறும் என காய்கறி, கனி, மலர் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஏப்ரல் 5-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews