[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

எதிர்க்கும் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஸ்டெர்லைட்

sterlite-inviting-actors-who-oppose-their-plant

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி குமரரெட்டியார்புரம் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ், விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியல்வாதி கமல்ஹாசன் ஆகியோரும் மக்களுக்கு ஆதரவை தெரி வித்துள்ளனர். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம்  தங்களது ஆலையை வந்து பார்வையிடுமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும் சல்பர்டை ஆக்சைட் மூலம் கேன்சர் வரும் என கூறப்பட்டு வருவது முற்றிலும் தவறு என கூறும் ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி தமிழக அளவில் ஆரோக்கியமான மூன்றாவது மாவட்டமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் வந்த பின்பு அந்த பகுதி பசுமை நிறைந்த ஒன்றாக மாறிவிட்டதாகவும், கழிவுநீர் உரிய முறையில் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறது எனவும் ஸ்டெர்லைட் கூறுகிறது. 

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் முழுமையாக பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வருகிறது என்றும் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டு குடிக்க முடியாத சூழலில் உள்ளது என்றும் மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கின்றனர். 

மக்களின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் போன்றோரும், அரசியல் தலைவர் கமல்ஹாசன் போன்றோரும் ஆலையை மூட குரலெழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close