சென்னையை சேர்ந்த நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி மோசடி செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி புகார் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்
குமாருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூபேஷ் குமார் வெளிநாட்டுக்கு தப்பாமல் இருக்கும் பொருட்டு சிபிஐ சார்பில்
லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.824 கோடி வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் பூபேஷ் குமார், அவரது மனைவி நீட்டு ஜெயின்
ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு நகைக்கடை 250 கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐயில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நாதெள்ளா நகைக்கடை மீது எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், நாதெள்ளா நகைக்கடை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து போலி ஆவணங்கள் கொடுத்து 250 கோடி ரூபாய் மோசடி செய்ததாக
சிபிஐயிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கவுள்ளது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !