[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவுக்கு தோல்வி பயம்: கே.சி.வீரமணி

kc-veeramani-says-dmk-fear-in-local-body-election

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற பயத்தினால் தான் திமுக தடை வாங்கி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது. இதனால் தான் தேர்தல் நடத்த முடியாமல் போனது வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழாவும் மற்றும் காசநோய் விழிப்புணர்வு பேரணியையும் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். இதில் பேசிய கே.சி.வீரமணி " இதுவரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மக்கள் தான் பயனடைந்து இருப்பார்கள். ஆனால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுகதான். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தடையாக இருந்தது திமுகவை சேர்ந்தவர்கள்தான். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற பயத்தினால் தான் திமுக தடை வாங்கி உள்ளாட்சி தேர்தலை  நிறுத்தியது. இதனால் தான் தேர்தல் நடத்த முடியாமல் போனது" என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close