[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை
  • BREAKING-NEWS 3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
  • BREAKING-NEWS சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்

சாலையில் வீணாய் போன துவரம் பருப்பு மூட்டைகள்: இதுதான் காரணம்..!

lorry-accident-near-tambaram

அதிகப்படியான பாரம் ஏற்றி சென்ற லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையிலேயே சிதறி வீணானது.

சென்னை எண்ணூரில் இருந்து குடிமைபொருள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சேலம் செல்வதற்காக சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இரும்புலியூர் மேம்பால வளைவில் எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட 20 டன் துவரம் பருப்பு மூட்டைகள் சாலையிலேயே கொட்டிச் சிதறின. சாலையில் கொட்டிக் கிடந்த துவரம் பருப்பின் மேலேயே அவ்வழியாக சென்ற வாகனங்கள் சென்றதால் துவரம் பருப்பு மூட்டைகள் அனைத்தும் வீணானது. வீணான துவரம் பருப்பு குறித்து குடிமை பொருள் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

இந்த லாரியின் சரக்கு ஏற்றக்கூடிய அளவு 18 டன் என கூறப்படுகிறது ஆனால் 20-க்கும் மேற்பட்ட டன் அளவிற்கு சரக்கு ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பருப்பு மூட்டைகளை சரிவர கட்டவில்லை எனவும் தெரிகிறது. அதிகப்படியான பாரம் ஏற்றி வந்ததும், லாரியின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததுமே விபத்து ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. லாரி ஓட்டுநர் நளநாதனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக சென்னை குராம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: செய்தியாளர் S. சாந்தகுமார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close