[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியை

the-teacher-who-locked-the-student-at-school

மாணவனை பள்ளியில் வைத்து பூட்டி சென்ற ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியை அடுத்த பிஎஸ் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கலைவாணி. இவர் 4ஆம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் வகுப்பறையை பூட்டிவிட்டி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அந்த வகுப்பில் இருந்து மாணவன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருபுவனை காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சுமார் 2மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவனை மீட்டனர். மாணவன் வேல்முருகன் இருந்தது தெரியாமல் கவனக்குறைவாக வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு ஆசிரியை சென்று விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை இந்திரா, வகுப்பு ஆசிரியை கலைவாணி ஆகியோரை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை இயக்குனர் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close