[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தமிழை கையிலெடுத்த கூகுள்..!

google-has-taken-tamil-language

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் தனது விளம்பர சேவையை தமிழ் மொழிக்கும் நீட்டித்திருந்த நிலையில் நேற்று Google for தமிழ் என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியுள்ளது.

இணைய உலகின் ஜாம்பவனான கூகுள் நிறுவனம் கடந்த 2003 ஆம் ஆண்டு Google adsense சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இணையதள உரிமையாளர்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாயை பெற்றுத் தரும் வசதியை கூகுள் உருவாக்கித் தந்தது. ஆனால் இந்த வசதி நீண்டகாலமாக தமிழ் மொழிக்கு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் தனது விளம்பர சேவையை தமிழ் மொழிக்கும் நீட்டித்தது.

 
இதன்மூலம்  தமிழ் இணையதளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை இணையதள உரிமையாளர்களுக்கு கூகுள் வழங்குகிறது.

இந்நிலையில் நேற்று Google for தமிழ் என்ற நிகழ்ச்சியை சென்னையில் கூகுள் நடத்தியுள்ளது. இதில் இணைய வடிவமைப்பாளர்கள், இணையத்தில் அதிகம் எழுதுபவர்கள், இணையத்தை நடத்துபவர்கள் என பலர் பங்கேற்றிருக்கின்றனர். இது தமிழ் இணையதள உரிமையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூகுள் நிறுவனம் இதுபோன்று பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Googleதமிழ்TamilChennai
Advertisement:
Advertisement:
[X] Close