விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துப்பு கொடுப்பவர்களுக்கு உரிய சம்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் சிறுவன் சமயனை கொன்றதுடன், சிறுவனின் தாய் மற்றும் சகோதரி மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக , குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 17 வட மாநிலத்தவர்கள் உட்பட 267 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே இந்த வழக்கை மத்திய புலனாய்த்துறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளம்புத்தூர் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆராயி மற்றும் அவரின் மகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆராயி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்