[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மனு: அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு

petition-seeking-local-body-election-madurai-hc-new-ordered

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ” தமிழகத்தில் 2016 அக்டோபர் 24-ஆம் தேதி முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக இன்று வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஜூலை மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபரில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் அப்போதும் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இது குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close