[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?: தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

voters-expectations-from-government

விவசாயக் கடன் எளிதில் கிடைக்க வேண்டும் என கிராமப்புற வாக்காளர்களும், புதிய வேலைவாய்ப்பு வேண்டும் என நகரப்பகுதி வாக்காளர்களும் எதிர்பார்ப்பதாக ஏடிஆர் என்ற தனி‌யார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

விவசாயக் கடன் தவிர போதிய வேலை வாய்ப்பு, விவசாயத்திற்கு மின்சாரம் ஆகியவை கிராமப்புற வாக்காளர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்பு தவிர‌ ஒலி மாசு குறைப்பு , குடிநீர் வசதி ஆகியவை நகர மக்களின் பிற பிரதான எதிர்பார்ப்புகளாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 16 ஆயிரம் பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close