[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

நான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லங்க: ரவுடி பினு கதறல் வீடியோ

i-m-not-a-big-shot-rowdy-binu

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற ரவுடி பினு சரண் அடைந்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது பினு உள்ளிட்ட சுமார் 25 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பிய பினுவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இவர் மீது 3 கொலை வழக்குகளும், கொலை மிரட்டல், கொலை முயற்சி என 12 வழக்குகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. 1998ல் தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரை, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். பினுவை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் பினுவை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவுடி பினு இன்று சரண் அடைந்துள்ளளார். 

அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ரவுடி பினு சரண் அடைந்தார். சரண் அடைந்த அவரிடம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரிடம் சிக்காமலிருக்க இத்தனை நாளும் காரிலேயே சுற்றி வந்ததாக விசாரணையின்போது பினு தெரிவித்ததாகத் தெரிகிறது. உணவுக்காக மட்டுமே காரிலிருந்து இறங்கியதாகவும் மற்றபடி முற்றிலும் பயணத்திலேயே இருந்ததாகவும் பினு கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 சரணடைந்த ரவுடி பினு, காவல் துறையிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நான் தான் பினு. சென்னை சூளைமேட்டில் பிறந்து வளர்ந்தவன் நான். எனக்கு வயது 50. நான் ஒரு சுகர் பேஷண்ட். நிறைய ரவுடித்தனம் செய்து வந்துள்ளேன்.நிறைய முறை சிறைவாசம் அனுபவித்தவன். திருந்தி வாழ நினைத்து  3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன். நான் கரூரில் தங்கியிருந்தது எனது தம்பிக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய 50ஆவது பிறந்த நாளுக்கு சென்னை வருமாறு தம்பி அழைத்தான். வந்த இடத்தில் எல்லா ரவுடிகளும் கூடியிருந்தனர்.ஏன் இப்படிச் செய்தாய் என தம்பியிடம் கேட்டேன்.இல்ல உன்ன 3வருஷமா பார்க்காததால் உன்ன பார்க்கனும் சொன்னாங்க என்றான். இங்கு ஒரு பிரச்னையும் இல்லை பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்தவுடன் சென்று விடு என கூறினான். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எங்களை சுற்றி வளைத்தனர். வேறு வழியின்றி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். தப்பி ஓடிய பிறகும் சென்னை போலீஸ் என்னைத் தேடியது. வேறு வழியின்றி நான் நேரில் வந்து விட்டேன்.நீங்கள் நினைப்பது போல நான் பெரிய ரவுடியல்ல.மன்னித்து விட்டு விட்டால் திருந்தி வாழ்கிறேன்” என தெரிவித்துள்ளான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close