[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

உலகத் தமிழ்ச்சங்க சார்பில் பிரம்மாண்ட நூலகம்

great-library-on-behalf-of-the-world-in-madurai

உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் ஒரு லட்சம் நூல்கள் கொண்ட பிரம்மாண்டமான நூலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் 6 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சம் நூல்கள் கொண்ட பிரம்மாண்டமான உலகத் தமிழ்ச்சங்க நூலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தெரிவித்திருந்தபடி, இந்த நூலகம் அமைக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1, 305 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு லட்சம் நூல்களைக் கொண்டு இந்த நூலகம் அமைக்கப்படுமென்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச்சங்க கட்டடத்தின் முதல் தளத்தில், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித்தேர்வு பயிற்சி மையம், சுய நூல் வாசிப்புப் பிரிவு ஆகிய வசதிகளுடன் இந்த நூலகம் அமையுமென்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு அமையும் நூலகத்துக்கு உலகத் தமிழ்ச்சங்க நூலகம் எனப் பெயர் சூட்டவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close