[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பட்ஜெட்டில் திருச்சி மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன

what-is-the-expectation-of-the-trichy-people-in-the-budget

திருச்சியிலிருந்து பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக உள்ள நிலையில் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

தமிழகத்தின் மையப்பகுதியாக திகழும் திருச்சியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், திருச்சி மார்க்கமாக சென்னைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பகல் நேரத்தில் மேலும் ஒரு ரயிலை இயக்க வேண்டும் என்றும், பெங்களூருக்கு கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி கோட்டத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டிக் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் ரயில்வே நிர்வாகம் திருச்சிக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை எனவும் நுகர்வோர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், 20 ஆண்டுகளாக திருச்சி-பெங்களூர் இடையே கூடுதல் ரயில் இயக்கக்கோரியும் அரசு செவிசாய்க்கவில்லை என அவர்கள் புகார் கூறுகின்றனர்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : TrichyBudget
Advertisement:
Advertisement:
[X] Close