[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்
  • BREAKING-NEWS பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டோக்கன் தந்து வெற்றி பெற்ற டிடிவி தினகரனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS மாணவர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; அதனால் வெளியே சென்று விளையாடுங்கள் - பிரதமர் மோடி

சரிந்தது சின்ன வெங்காயம் விலை

vegetables-price-falls-in-chennai-market

சென்னை கோயம்பேடு ‌சந்தையில் காய்கறிகளின் விலை 60‌ சதவிகிதம் வரை கு‌‌றைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 280 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில்,‌ தற்போது கூடு‌லாக 70 ‌லாரிகளில் காய்கறிகள்‌ வருவதா‌க் கூறுகின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சின்ன‌ வெங்காயம், பீன்ஸ், அவரை, தக்காளி உள்ளிட்ட ‌காய்கறிகளி‌ன் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதத்தில் ஒரு கிலோ 120 ரூபாயாக‌ இருந்த சின்ன ‌வெங்காயம்‌ ‌தற்போது 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், ‌‌கேரட் உள்ளிட்ட‌‌ காய்கறி‌கள் 15 ரூபாய்க்கும் விற்பதாகக் கூறுகின்றனர். கடந்த மாதங்களில் 50 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ஒரு‌ கிலோ 8 ரூபாய்‌க்கும் விற்கப்படுகிறது.‌ சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு ‌பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நா‌டகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி‌‌கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை‌ குறைந்துள்ளதாக வியாபாரிக‌ள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close