[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

வெறிநாய்கள் அட்டகாசத்தால் வெறிச்சோடிய தெருக்கள்!

the-rabbits-are-troubled-in-thiruvallur

திருத்தணி அருகே வெறிநாய்களுக்கு பயந்து சிறுவர்கள் உட்பட யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்‌ மாவட்டம் திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சிக்குட்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500க்கும் மேற்பட்ட
இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி
வருகிறது. இந்த பகுதியில் வெறிநாய்கள் தொல்லை பெரிதும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரேநாளில்
20க்கும் அதிகமான பள்ளி மாணவர்களை வெறிநாய்கள் கடித்துவிட்டதாக பெண்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

வெறி நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் குழந்தைகள், சிறுவர்களை வீடுகளை விட்டு வெளியில் அனுப்புவதற்கு பெற்றோர்
அஞ்சுகிறார்கள். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர். அத்துடன்
சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்களிடம் நாய்
பிடிக்கும் வண்டி இல்லை என்றும், வண்டி கிடைத்ததும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close