[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு

avaniyapuram-jallikattu-festival-started

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு  தொடங்கியது. அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில், 623 காளைகளுடன் 964 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்‌பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 2 அடுக்கு தடுப்பு வேலிகள்
அமைக்கப்பட்டுள்ளன. 

அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close