[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி திரும்பி செல்லக்கோரி GoBackModi என்ற பேனருடன் லண்டனில் தமிழர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS இந்தோனேஷியாவில் சாம்லேகி பகுதியில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

ரயில் சேவையை தாமதமாக்கிய புகையும், பனியும்

smoke-and-snow-that-delayed-the-train-service

கடும்பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை தாமதமாகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுதலாக கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் அதிகாலையிலேயே வீதிகளில் குவிந்த சிறுவர்கள் பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னையை கடுமையான புகைமூட்டம் சூழ்ந்தது. பழைய பொருட்களை எரிப்பதால் பனியுடன் சேர்ந்து சென்னை புகைமண்டலமாக  காட்சியளிக்கிறது.

இதன்காரணமாக சென்னை புறநகர் பகுதியில்  ரயில் சேவை தாமதமாகிறது. அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் காணப்படுவதால் சென்னை, அரக்கோணம் மார்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் அரைமணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close