[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு 12 Jan, 2018 08:36 AM

முயல் விடும் பாரம்பரிய திருவிழா ...

dharmapuri-rabbit-festival

அரூர் பகுதியில் முன்னோர்களின் வாழ்க்கையை நினைவு கூறும் பாடிவேட்டை எனப்படும் முயல்விடும் திருவிழா நடத்தப்படுகிறது. 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி என்ற கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முடிந்த பிறகு, கரிநாளுக்கு அடுத்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பாடிவேட்டை முயல் விடும் பாரம்பரிய திருவிழா நடத்தப்படுகிறது. ‘பாடி’ என்றால் வனப்பகுதியிலேயே தற்காலிக மரக்கிளையின் மேல்வீடு அமைத்து தங்கி, விலங்குகளை வேட்டையாடுவது எனப்பொருள்.

முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் இந்த பாடி வேட்டை இதுவரையிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தற்போது நடத்தப்படும் பாடி வேட்டையில் முயல் வேட்டையாடப்படுவதில்லை, பண்டிகை முடிந்ததும் பத்திரமாக வனப்பகுதியில் விடப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலும் பொங்கல் விழாவில், அனைத்து கிராமங்களிலும் எருதுவிடும் விழாவே நடைபெறும். அதற்கு மாற்றாக குடுமியாம்பட்டியில் மட்டும் பாடிவேட்டை முயல் விடும் திருவிழா நடைபெறுகிறது.

இந்த பாடிவேட்டைக்காக அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு வழிபாடு நடத்திவிட்டு, அந்தபகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள ஆண்கள் மட்டும் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் வலை மற்றும் கொம்புகளுடன் செல்கின்றனர். அத்துடன் ஒரே நாளில் முயலையும் வலை வைத்து பிடித்துவிடுகின்றனர். 

முயல் கிடைத்ததும், அதனை மேலதாளங்கள் முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். பிடித்து வந்த முயலை மாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் அருகே பாதுகாக்கின்றனர். பின்னர் ஆலமரம் அமைந்துள்ள வளாகப்பகுதியில் அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி மாரியம்மன் மற்றும் வேடியப்பன் சுவாமிகளை ஊர்வலமாக எடுத்து வருவர். அந்த சமயம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் கோவில் அருகில் பொங்கல் வைத்து வழிபடுவர். இதைத்தொடர்ந்து முயல் மந்தைக்கு எடுத்து வரப்பட்டு, மக்களின் பார்வைக்கு காட்டப்படும்.

அத்துடன் முயலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவிக்கப்படும். இதையடுத்து முயல்விடும் விழா குழுவினர் முயலை எடுத்து சாமியை சுற்றி வருவர். பின்னர் சாமி காட்டும் திசையில் யாரும் பிடிக்க முடியாதபடி, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் தப்பிச்செல்லும் வகையில் இறுதியாக முயலை தரையில் விட்டுவிடுவார்கள். முயலும் வயல்களில் ஓடி வனப்பகுதிக்குள் நுழைந்துவிடும். இந்த பாரம்பரிய முறையை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close